பூமியைப் போலவே பல கோள்கள்
நமது சூரியத்தொகுதியையும் தாண்டி வேறு விண்மீன்களிலும் கோள்கள் இருக்கலாம் என்று காலம் காலமாக வானியலாளர்கள் கருதினாலும், முதலாவது வெளிக்கோள் (exoplanet) 1990 களில் கண்டுபிடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான வெளிக்கோள்களை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை நமது வியாழனைப் போல மிகப்பெரிய கோள்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், பிற விண்மீன்களை சுற்றிவரும் பூமியைப்போல சிறிய கோள்களையும் கண்டறிய வழிவகுத்தன. இன்று நமக்கு பூமியின் அளவில் உள்ள கோள்கள், மற்றும் பூமியை விட சில மடங்குகள் மட்டுமே பெரிய கோள்கள் நூற்றுக்கணக்கில் தெரியும்! ஆனாலும் இங்கு மிக முக்கியமான கேள்வியாக எழுவது, “பூமியையொத்த அளவில் உள்ள கோள்கள், பூமியைப் போலவே அமைப்பிலும் ஒத்து இருக்குமா? அங்கு உயிரினம் இருக்குமா?” என்பதே.
Read more